16வது சுனாமி நினைவு தினம்.
இன்று சித்தர் கல்வி மற்றும் சமூக சேவை ஒன்றியம் (சித்தர் கல்வியகம்) 2004ம் ஆண்டு இறந்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி பிராத்தனை செய்தனர்.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஜன் அவர்களும் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு.k.ஜெயராஜி அவர்களும் கல்வியக போசகர் திரு.கி.சசிகரபவன் அவர்களும், கல்வியக ஆசிரியர்கள், மாணவர்கள் சுகாதார விதிகளை பின்பற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதன் போது இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற எமது கல்வியக மாணவி செல்வி.செ.ஜெருஷிகா அவர்களுக்கு கௌரவமும் வழங்கப்பட்டது.
இயற்கையை பாதுகாத்து நாமும் நலமுடன் வாழ்வோம்.