காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயத்தில் பிரார்த்தனை - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 29 டிசம்பர், 2020

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயத்தில் பிரார்த்தனை

மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் 
!------------------------------------------------------
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயத்தில் தொற்றிலிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு இன்று பூரணை தினத்தில் (செவ்வாய்க்கிழமை 29.12.2020) இடம்பெற்றது. 

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயபரிபாலனசபையின் ஒத்துழைப்புடன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இ.மகேஸ்வர குருக்கள் தலைமையில் அதிகாலை 05.30 இடம்பெற்றது.
 
படங்கள்-சத்தியமாறன்








 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages