கல்லடியில் இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள எமது மண்ணின் மைந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை அருங்காட்சியகமாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி , உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி தலைமையில் வெள்ளிக்கிழமை(14) காலை இடம்பெற்றது.
பூஜை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் இராமகிருஸ்மிசன் துறவிகள், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபைத் தலைவர் திரு. க. பாஸ்கரன் (இளைப்பாறிய வலயக்கல்விப் பணிப்பாளர்) , காரைதீவு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றத் தலைவர் திரு. வெ. ஜெயநாதன் (இளைப்பாறிய கோட்டக்கல்விப் பணிப்பாளர்), சுவாமியின் அபிமானிகள், மிசன் பழைய மாணவர்களின் பங்குபற்றுதலுடன் அடிக்கல் நட்டுவைக்கப்பட்டது.