நிர்வாக சபை கூட்டத்தின் பிரகாரம்.
பக்தர்களை மட்டுப்படுத்தி சுகாதார விதிகளை பின்பற்றி எமது சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் குருபூஜை இடம்பெறும்.
ஊர் அறவீடு 25.07.2020 காலை ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயத்தில் இருந்து இரண்டு குழுவாக இடம்பெறும்.
26.07.2020
ஊர்வலம் மாலை 3.00 மணிக்கு
27.07.2020
காலை 9.00 மணிக்கு அபிசேகம், கோமாதா பூஜை, யாகம் பூசை
மாலை 4.00-5.00 பஜனை
மாலை 5.00 திருவிளக்கு பூஜை
28.07.2020
குருபூஜை தினம்
காலை 5.30-8.00 பால்குடபவனியும் பாலாபிசேகமும்
காலை 8.00-9.00 அபிசேக பூஜை
காலை 9.00 காலை உணவு. (றிமைண்டர் விளையாட்டு கழகம்)
காலை 10.00-11.00 பக்தர்கள் சுவாமிக்கு பூ போடல்
காலை 11.00 சொற்பொழிவு
சுவாதி நட்சத்திரம் 12.28 மணிக்கு சங்கு முழங்க பறை கொட்ட ஜீவசமாதி பூஜை இடம்பெறும்.
பூஜை முடிந்த பின்னரும் பக்தர்கள் பூ போட்டு வழிபாடு செய்யலாம்.
மாலை 6.00 மணிக்கு திருவூஞ்சல் பூஜை.
29.07.2020 மாலை 7 மணி முதல் இடும்பன் பூஜை.
எதிர்வரும் 25,26.07.2020 ம் திகதி ஆலயத்தில் சிரமதானம் இடம்பெறும்.
சித்தர் நூதனசாலைக்கான ஆரம்ப வேலைகள் இடம்பெறுகின்றது.
பக்தர்களின் வசதிகளுக்கு ஏற்றால் போல் இம்முறை குருபூஜை வழிபாட்டினை செய்வதற்கு நிர்வாக சபையினர் பூரண முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி குருவருளை பெற பிராத்திக்கின்றோம்.