உகந்தமலை முருகனாலயத்திற்கான பாதயாத்திரை அன்னதானம் தடை... - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 23 ஜூன், 2020

உகந்தமலை முருகனாலயத்திற்கான பாதயாத்திரை அன்னதானம் தடை...

உகந்தமலை முருகனாலயத்திற்கான பாதயாத்திரை அன்னதானம் தடை
காட்டுப்பாதை திறக்கப்படமாட்டாது மேலதிக அரச அதிபர் கூட்டத்தில் தீர்மானம்..

உகந்தமலை முருகனாலயத்திற்கான பாதயாத்திரை இம்முறை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு அன்னதானம் வழங்கலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானங்கள் (22.06.2020) பொத்துவில் லாகுகலை பிரதேசசெயலகத்தில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என ஆலய பரிபாலனசபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்திற்கான  கொடியேற்றம்  ஜூலை மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. அதேவேளை ஆடிவேல்விழா உற்சவத்தின்  தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் 4ஆம் திகதி  காலை நடைபெறும்.

இக்காலப்பகுதியில் திருவிழாவிற்குரிய உபயகாரர் சார்பில் 50பேரளவில் அந்தந்த பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி சான்றிதழ்களுடன் ஆலயத்திற்கு வந்து தங்கி திருவிழாவில் பங்கேற்றமுடியும்.ஏனையோர் பகலில் மட்டும் 50பேர் 50பேராக மட்டும் வந்து வணங்கிவிட்டுச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இரவில் தங்கமுடியாது.

ஆலயசூழலில் கடைத்தெரு வைக்கமுடியாது. சுகாதார விதிமுறைகளுக்கிணங்கவே அனைத்தும் இடம்பெறும். என ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.

கதிர்காமத்திற்கான பாதயாத்திரையும் தடை செய்யப்பட்டள்ளதால் காட்டுப்பாதையும் திறக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தர்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages