அகவையில் பவள விழா காணும் சிட்னி உதயசூரியன் உயர்திரு. ஐயா. குணரத்தினம்
இன்று தனது 75 அகவையில் கால் பதிக்கும் சிட்னி உதயசூரியன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், உதயசூரியன் மாணவர் உதவி மையத்தின் தலைவருமான உயர்திரு. ஐயா. குணரெத்தினம் அவர்களுக்கு காரைதீவின் இணைய நுழைவாயில், காரைதீவு . ஒர்க் சார்பாக எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
என்பதற்கு அமைவாக பலரும் அன்னாருக்கு வாழ்த்துக்களை பகிர்கின்ற இந்தவேளையில், தனது மகிழ்வான வார்த்தைகளாலும் அன்பான இனிய உறவாலும் எல்லாருடைய மனங்களிலும் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் தனது சமூக சேவையில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கி செயற்படும் அன்னாருடைய சேவைகள் மென் மேலும் சிறப்புற இறைவன் அவருக்கு முழு தேக ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என இந்த வேளையிலே இறைவனை பிராத்திக்கின்றோம். வாழ்க உம் தமிழ் பணி வளர்க்க உம் இனிய செயல்.
பவளவிழா கண்டிடும் இரத்தினம்..
அகத்திலே புகுந்து
குலவிடும் இனிய நேயம்
அன்பெனும் ஆற்றிலே அன்றாடம் மூழ்கியும்
அடங்காத ஆத்ம தாகம்
எழுபத்தியைந்தாவது அகவையாம்
அதற்கிந்த கவிதையாம்
அறத்தினூடு அகமகிழ்ந்து
பகிருகின்றேன்
பன்முகத் திறமையில் பாரினை வலம் வரும்
என் மண்ணின் பெருமகனார்
பைந்தமிழ் கொண்டு வெளியிடும்
உதயசூரியன் சஞ்சிகை
இதயத்தை கொஞ்சிவிடும்
புலம் பெயர்ந்து வந்து புது வாழ்வு கண்டாலும் -தாய்
நிலத்தினை மறக்காத மண்ணின் மைந்தன் நீங்கள்
கஷ்டத்தில் உள்ள எம் மக்களுக்கு என்றுமே
இஷ்டதுடன் உதவிகள் செய்பவர் நீங்கள்
ஆயிரம்வேலை அன்றாடம் இருந்தாலும்
தாய்த்தமிழ் காக்க தளராது உழைப்பவர் நீங்கள்
தாயகத்தில் நலிவடைந்த மாணவ மணிகளின்
தேவைகள் அறிந்து உதவி புரிபவர் நீங்கள்
முத்தமிழ் வித்தகர் அவதரித்த மண்ணிலே
சித்தரும் இருந்த அந்த சீரிய மண்ணிலே ஒரு
இரத்தினமாகவே பிறந்தவர் நீங்கள்
அகவை எழுபத்தியைந்தில் இன்று
அனுபவ முதிர்ச்சி கொண்டு
ஆவுஸ்திரேலியா நாட்டில் நின்று
அன்புள்ளத்தோடு அசத்துகிறீர்கள்
திருவென்னும் நிறைவோடு திகழ்கின்ற புகழ்வாழ்வு
தினம் உங்களை வந்து சேரும் அது
திசையெங்கும் கைகொட்டி இசையட்டும் உங்களோடு
திருவருள் துணையாக அமையட்டும் எப்போதும்
வாழ்க என் அன்பு உறவே பல்லாண்டு பல்லாண்டு...
வரிகள் :கோவிலூர் செல்வராஜன்
Info:Karaitivu.Org webteam Australia