காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின்(KDPS) செயற்பாடுகளில் அடுத்த மைல்கல்லாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக காரைதீவு ஒன்றியம் ஐக்கிய ராஜ்ஜியம்(KAUK), அவுஸ்ரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்(AusKar)இன் அனுசரனையில் இந்த அசாதாரண சூழ்நிலையில் வீடுகளில் தங்கியிருக்கும் அல்லது அடைபட்டுக்கிடக்கும் மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கொண்டே சுயபற்சியினை மேற்கொள்ள தரம் 3 தொடக்கம் தரம் 9 வரையிலான மாண்வர்களுக்கு சகல பாடங்களுக்குமான மாதிரி வினாத்தாள் மற்றும் Covid19 சம்பந்தமான விழிப்புணர்வூட்டல்கள் அடங்கிய கோவையொன்று பிரதேச செயலாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்பட்டது. இவையாவும் பொறுப்பாசிரியர்களினூடாக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இதனை பெற்றோர்கள் மிகவும் சிரத்தையுடன் பிள்ளைகளுக்கான பயிற்சியாக கருத்திலெடுத்து அவர்களை நேரத்திற்கு செய்ய வைத்து அதனை திருத்தக்கூடிய பெற்றோர்கள் திருத்தியோ அல்லது ஆசிரியகளிடம் ஒப்படைத்து திருத்தியோ மாணவர் அடைவு மட்டத்தை (Evaluate Progress of The Student) அவதானிக்க கூடியவாறு அமையப்பெற்றுள்ளது.
தகவல்
KDPS- Organizing Committee