காரைதீவில் 654குடும்பங்கள் பாதிப்பு!இடம்பெயரும் அவலம். - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 4 டிசம்பர், 2019

காரைதீவில் 654குடும்பங்கள் பாதிப்பு!இடம்பெயரும் அவலம்.



அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையையடுத்து கரையோரப்பிரதேசமான காரைதீவுக்கிராமம் வெள்ளத்தில் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 அங்கு வீதிகள் வீடுவாசல்கள் எல்லாம்வெள்ளக்காடாகக்காட்சியளித்தது.
பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக விஜயம்செய்து பார்வையிட்டதோடு வெள்ளம் வடிந்தோடும் வண்ணம் தமது ஊழியர்களை கொண்டு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

வடிகான்கள் பல மூடுண்டதால் வெள்ளநீர் ஓடமுடியாமல் அருகிலுள்ள வளவு வீடுகளுள் ஏற் ஆரம்பித்ததைக்கண்ணுற்ற அவர் ஜேசிபி உதவியுடன் அவற்றை சுத்தமாக்கி வடிகான்களினூடாக வெள்ளநீhரை ஓடச்செய்தார்.

அத்துடன் மேலதிகமான வெள்ளத்தை கடலுக்குள் வெட்டிவிடப்பட்டதையும் அவதானித்தார்.
காரைதீவுக்கிராமத்தில் மட்டும் 654 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 28குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர்களுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் பலவீதிகள் வெள்ளத்துள் உள்ளன. இன்னும் மழைபொழிந்தால் பல குடும்பங்கள் இடம்பயெரநேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages