காரைதீவு பிரதேச செயலகமும், மனித அபிவிருத்தி தாபனமும் இணைந்து இலங்கை வானொலி பிறை எப்.எம் அனுசரணையுடன் நடாத்திய
"பிள்ளைகளின் வெற்றிக்கான நட்பான நாடு"
"முதியோர்களான உங்களுக்கு சிறந்த இடத்தினை வழங்கும் நாளைய தினத்தினை நோக்கி "
எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின கலாச்சார விளையாட்டு நிகழ்வு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (17) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜனாப். எ.எம்.அப்துல் லத்தீப் அவர்களும், கெளரவ அதிதிகளாக காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திரு.டி. உமாசங்கர் அவர்களும், காரைதீவு ஹற்றன் நேஷனல் வங்கி முகாமையாளர் திரு.இ.ஜெ.மோஸஸ் அவர்களும், மனித அபிவிருத்தி ஸ்தாபனம் இணைப்பாளர் திரு. P. ஸ்ரீகாந்த் அவர்களும் சிறப்பு அதிதிகளாக பிரதேச வைத்திய அதிகாரி திருமதி ஜி. சிவசுப்ரமணியம் அவர்களும், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப் எம்.ஐ. றிஸ்னி முத்து அவர்களும், காரைதீவு பிரதேச சபை செயலாளர் திரு.எ.சுந்தரகுமார் அவர்களும் மற்றும் மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இதன்போது காரைதீவு முதியோர் சங்கங்கள், தேசிய மட்ட சிறுவர் கழகத்துக்கு தெரிவாகிய பிரதேச சிறுவர் கழக உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 40 சமுர்த்தி பயனாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டது.