இலங்கையின் சூழல் தொகுதியைப் பாதுகாத்து, வன அடர்த்தியை அதிகரித்து பசுமை நிலையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றாடல் விடயம்சார் அமைச்சரான அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடைய எண்ணக்கருவில் உரித்தான "வன ரோபா" தேசிய மரநடுகை நிகழ்ச்சி மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது.
அதில் ஒரு அங்கமாக காரைதீவு பிரதேச செயலகமும்,இராணுவத்தினரும் இணைந்து இன்று (09) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு.டி.வித்தியராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற " வன ரோபா" தேசிய மரநடுகை நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களும், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட 241 பிரிகேட் கமாண்டர் கர்னல் விமலரத்ன அவர்களும், சிறப்பு அதிதியாக கொமாண்டிங் ஆபிஸர் மேஜர் தர்மசேன அவர்களும் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பாடசாலை ஆசிரியர்களும், படைவீரர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.