இன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 7 செப்டம்பர், 2019

இன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை

இன்று மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட காரைதீவு- மண்டுர் பாதயாத்திரை
(காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்றுச்சிறப்புமிக்க மண்டுர்
முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டி காரைதீலிருந்து இன்று
 (7)சனிக்கிழமை மண்டுருக்கு பாதயாத்திரை இடைபெற்றது.

சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காரைதீவு பக்தர்கள் கலந்துகொண்ட இப்பாதயாத்திரையை காரைதீவு இந்துசமயவிருத்திச்சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது.இன்று  அதிகாலை 4.மணியளவில் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து விசேடபூஜையுடன் பாதயாத்திரை ஆரம்பமானது.

10அலங்கரிக்கப்ப்ட்ட அலங்கார ஊர்திகள் முன்னேவர பஜனை சகிதம் பக்தர்கள் யாத்திரையில் ஈடுபட்டனர். முதியோர் ஆண்பெண் இளைஞர்யுவதிகள் குழந்தைகள் என பலதிறத்தினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இருள்பிரியமுன்னர் கல்முனையைச்சென்றடைந்ததும் அங்கு முருகனாலயத்தில் கல்முனை முருகன்அறுபடை அன்னதானசபையினர் பாதயாத்திரிகர்களுக்கு நீராகாரம் வழங்கினர்.

பின்னர் நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி நாவிதன்வெளி தம்பலவத்தை ஊடாக மண்டுரைச்சென்றடைந்தது.

இடையே கிட்டங்கிப்பிள்ளையாhர் ஆலயத்திலும் தம்பலவத்தையிலும் நீராகாரம் வழங்கப்பட்டன.









Post Bottom Ad

Responsive Ads Here

Pages