காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயபரிபாலனசபைத்தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பட்டய அறிவிப்புதின ஊர்வல நிகழ்வை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் விசேடபூஜைசெய்து ஆரம்பித்துவைத்தார்.
பட்டயஅறிவிப்பு தொடர்பான அறநெறிமாணவர்களின் ஊர்வலம் கண்ணகை அம்மனாலயத்தில் புறப்பட்டு சித்தானைக்குட்டி மடாலயத்தை சென்றடைந்தது.
நூற்றுக்கணக்கான அறநெறிமாணவர்கள் இவ்வூர்வலத்தில் நந்திக்கொடி தாங்கி பங்குபற்றினர். சித்தரின் திருவுருவப்படம் தாங்கிய தேர் பின்னே அறநெறிமாணவர்களால் தாங்கிவரப்பட்டது.
நூற்றுக்கணக்கான அறநெறிமாணவர்கள் இவ்வூர்வலத்தில் நந்திக்கொடி தாங்கி பங்குபற்றினர். சித்தரின் திருவுருவப்படம் தாங்கிய தேர் பின்னே அறநெறிமாணவர்களால் தாங்கிவரப்பட்டது.
அங்கு சம்பிரதாயபூர்வமாக ஆத்மீகவாதி களான செ..மணிமாறன் வி.ரி.சகாதேவராஜா கு.ஜெயராஜி ஆகியோரால் ஆத்மீகஉரைகள் இடம்பெற்று ஆலயத் தலைவர் நந்தேஸ்வரனால் பட்டயம் வாசிக்கப்பட்டது.
நாளை 6ஆம் திகதி கோமாதா பூஜை அன்னதானம் திருவிளக்குப்பூஜை என்பன இடம்பெறும்.
7ஆம் திகதி புதன்கிழமை காலை 7மணிக்கு பாற்குடபவனியும் தொடர்ந்து 10மணியளவில் ஆலயத்தில் 51 கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்று 12மணிக்கு சிறப்புஆன்மீகச்சொற்பொழிவும் இடம்பெறும்.