இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற திறப்புவிழா!
அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதி.
(காரைதீவு நிருபர் சகா)
இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபம் நேற்று (27.06.2019) வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் விழா இடம்பெற்றது.
இராமகிருஸ்ணமிசன்இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்சராத்மானந்தா ஜீ மட்டு.மாநிலத்தலைவர் சுவாமி தக்சயானானந்தா ஜீ ஆகியோர் ஆன்மீகஅதிதிகளாகக்லந்தகொண்டு ஆசியுரை வழங்கினர்.
பழமைகுன்றாது நவீனமாகப்புனரமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் அவதரித்த பூர்வீகவாசஸ்தலமும் திறந்துவைக்கப்பட்டது.மேலும் சுவாமி பிறந்த இல்லத்தின்முன் நிறுவப்பட்டுள்ள இருக்கைநிலையிலுள்ள சுவாமி விபுலாநந்தரின் சிலை திறந்துவைக்கப்பட்டது
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமுகமேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு இவற்றை திறந்துவைத்தார்.கௌரவ அதிதிகாளக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.வேலுகுமார் கலந்துசிறப்பித்தார்கள்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் காரைதீவு பிரதேச செயலாளர் சவி.ஜெகராஜன் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்டபலர் கலந்துசிறப்பித்தனர்.
இந்த இரண்டுமண்டபங்கiளும் பொதுமக்கள் பாவனைக்காகவும் பார்வையிடலுக்காகவும் மீளக் கையளிக்கும் வகையிலான
ஆரம்ப நிகழ்வு நேற்றுசிறப்பாக நடைபெற்றது.
கூடவே அம்பாறைமாவட்டத்தில் பின்தங்கிய 45 இந்துஆலயங்களுக்கான உதவுதொனை வழங்கும் நிகழ்வும் நடந்தேறியது.அதேவேளை இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையத்தின் அம்பாறை மாவட்டக் கிளையினை ஆரம்பித்து வைத்தல் நிகழ்வும் இடம்பெற்றதுடன் மாதிரிவகுப்பும் நடாத்தப்பட்டுக்காண்பிக்கப்பட் டது.
ஈற்றில் அமைச்சருக்கு பொன்னாடை போhத்துக்கௌரவிப்பு இடம்பெற்றது.