கிழக்கு கரையோர சமர் கிண்ணம் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிவசமானது..
ஶ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினரின் அனுசரணையுடன் இடம்பெற்ற கன்னி கிழக்கு கரையோர சமர் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிக்கும் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு ஶ்ரீலங்கா ரெலிகொம் உயர் அதிகாரிகள்,காரைதீவு பிரதேச செயலாளர்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் கல்முனை கல்விவலய அதிகாரிகள் என பலரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
ஶ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினருடன் இணைந்து வெஸ்லி உயர் தர பாடசாலையினர் கல்முனையில் இருந்து காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்திற்கு வாகன பேரணியாக வருகை தந்தனர்.
பின்னர் அதிதிகள் வரவேற்க்கப்பட்டு கொடியேற்றும் வைபவம் இடம்பெற்று தேசிய கீதம் மற்றும் இரு பாடசாலைகளின் கீதங்களும் இசைக்கப்பட்டு சத்தியப்பிரமானம் செய்கின்ற நிகழ்வும் இடம்பெற்றது.
வீரர்கள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றதன் பின் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்லி அணியினர் விபுலானந்தா அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர்.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய விபுலானந்தா மத்திய கல்லலூரி அணியினர் 28.4ஓவர்கள் நிறைவில் 137ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தனர்.துடுப்பாட்டத்தில் சோபிதாஸ் 49ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றார்.
138என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய வெஸ்லி அணியினர் 91 ஓட்டங்களை பெற்ற வேளையில் சகல விக்கெட்களையும் இழந்தனர். .அந்தவகையில் 46 ஓட்டங்களினால் விபுலானந்தா அணி வெற்றி பெற்று கன்னி கிழக்கு கரையோர சமரில் சம்பியன்யனாக தெரிவு செய்யபட்டனர்.இந்த போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக விதுசனன் அவர்களும் சிறந்த துடுப்பாட்ட காரராக சோபிதாஸ் அவர்களும் போட்டியின் ஆட்ட நாயகனாக சிருஸ்காந்த் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும்படங்களுக்கு இங்கே