விபுலாநந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இன்று மரதன் ஓட்டம் கல்லூரியின் பிரதான வாயிலில் ஆரம்பித்துவைக்கபட்டது இதனை ஆரம்பித்து வைப்பதற்காக வைத்தியர் M.பிரசாத் கலந்துகொண்டார் இப் போட்டியில் மூன்று இல்லங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வீர்கள் கலந்துகொண்டனர் சிறப்பாக இடம்பெற்ற மரதன் ஓட்டம் காரைதீவின் தேரோடும் வீதிவழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இப்போட்டிக்கு நடுவராக விளையாட்டு உத்தியோகத்தர் L. சுலக்சன் கடமையாற்றினார்இப்போட்டியில் மருதம் இல்லம் முதலாம் மற்றும் மூன்றாம் இடம்களை பெற்றுக்கொள்ள முல்லை இல்லம் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது. இப்போட்டியின் முடிவின் அடிப்படையில் மொத்த புள்ளிகளின் கூட்டுத்தொகையின் தரவரிசைப்படி மருதம் இல்லம் 65 புள்ளிகளுடன் முதலிடத்திலும் குறிஞ்சி இல்லம் 43 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் முல்லை இல்லம் 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளது.
Post Top Ad
வெள்ளி, 25 ஜனவரி, 2019
