காரைதீவுப் பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை எட்டு(8)ஆதரவு வாக்குகளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் 10ஆவது மாதாந்த அமர்வும் வரவுசெலவுத்திட்ட அமர்வும் (10.12.2018) சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது வரவுசெலவுத்திட்டப் பிரேரணையை உறுப்பினர் ஸ்ரீல.மு.கா உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் முன்மொழிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஜெயராணி வழிமொழிந்தார்.
வரவுசெலவுத்திட்ட பிரேரணை தொடர்பான கருத்துக்கள் சகல உறுப்பினர்களாலும் சபையில் தெரிவிக்கப்பட்டன.
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சபாபதி நேசராசா நடுநிலை வகித்தார்.
மு.கா.உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எம்.றனீஸ் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களான த.மோகனதாஸ் எஸ்.ஜெயராணி அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஜலீல் சுயேச்சைஉறுப்பினரான எம்.பஸ்மீர் ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினரான மு.காண்டீபன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். இறுதியில் தவிசாளர் கி.ஜெயசிறிலின் வாக்கும் ஆதரவாக அளிக்கப்பட்டது.
அதன்படி எட்டு வாக்குகளைப்பெற்று 2019ஆம் ஆண்டுக்கான காரைதீவுப்பிரதேசசபையின் தற்போதைய தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையிலான சபையின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.