சுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 12 டிசம்பர், 2018

சுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை !

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் பழம்பெரும் சம்பவங்களைச் சித்திரிக்கும்  அரிய புகைப்படங்களை ஆவணமாக்கும் திட்டத்தினை  காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தினர்   முன்னெடுத்துவருகின்றனர்.

அதன் ஓரங்கமாக ஒருதொகுதி அரிய 60 புகைப்படங்களைப் பெரிதாக்கி பாதுகாப்பு கவசமிட்டு காட்சிப்படுத்தவுள்ளனர். இதற்கு பிரதேச செயலகம் நிதிஉதவி வழங்கியுள்ளது.

அவ்வாறு பெரியஅளவில் கவசமிட்ட புகைப்படங்களை பிரதேசசெயலகத்தினர் விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற பிரதிநிதிகளிடம் அண்மையில் கையளித்தனர்.

 குறித்த புகைப்படங்களை காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் கணக்காளர் செல்வி என்.ஜெயசர்மிகா தொழினுட்பஉத்தியோகத்தர் லயன் என்.ஸ்ரீரங்கன் இந்துகலாசார அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி கே.சுஜித்ராஆகியோர் பணிமன்ற பிரதிநிதிகளிடம் கையளித்தனர்.

உதாரணமாக  1947இல் கரந்தைத்தமிழ்ச்சங்கத்தில் சுவாமிகளின் 14வருட ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்ட இசைத்தமிழ்நூலான 'யாழ்நூல் ' வெளியீட்டுவிழா  திருக்கொள்ளம்புதூரில் இடம்பெற்றபோது எடுத்த அரிய புகைப்படம் போன்று பல பழைய புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு  பாதுகாப்புக்கவசமிடப்பட்டுள்ளன. 

இவையாவும் இந்துகலாசார அலுவல்கள் திணைக்களம் அடுத்தவருட ஆரம்பத்தில் காரைதீவில் நடாத்தவுள்ள சுவாமி விபுலாநந்த விழாவில் பகிரங்கமாக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages