உலக சிறுவர்தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலை இவ்வாண்டும் காரைதீவுக் கடற்கரையில் நேற்றுமாலை சிறுவர்தின களியாட்டநிகழ்வை நடாத்தவுள்ளது.
இந்தநிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை பாடசாலை ஆசிரியைகளான நிலந்தினி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும் சிறப்பதிதியாக உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.
சிறுவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சிறுவர் விளையாட்டுக்கள் வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் ஆடல்பாடல் உள்ளிட்ட பல வித நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விளையாட்டுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகல மாணவர்களுக்கும் பிரிசுகள் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்ச்சிகளை விளையாட்டு உத்தியோகத்தர் லோ.சுலக்சன் மத்தியஸ்தம் வகித்து நடாத்த ஆசிரியர் வி.விஜயபவா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.