பாராளுமன்ற அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையின் கீழ்(e-PAC) இணைய மயப்படுத்தப்பட்ட கணனி நிகழ்ச்சித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரீதியிலான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளடங்கிய 837 அனைத்து அரச நிறுவனங்களையும் செயலாற்றுகை மதிப்பீடு செய்ததன் பிரகாரம் 2016 ஆம் ஆண்டில் சிறந்த செயலாற்றுகையைக் காண்பித்த 101 அரச நிறுவனங்களிற்கான தேசிய விருது வழங்கும் வைபவம் இன்று காலை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சனாதிபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதம அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச நிறுவனங்களின் மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பிற விருந்தினர்களும் வருகை தந்திருந்தனர். படத்தில் வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகம் (1) , வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் (2),இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களம்(3),யாழ் (4) மற்றும் மட்டக்களப்பு(5) மாவட்ட செயலகங்ககளிற்கான விருதுகளை சனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்வழங்குவதை காணலாம்.
தகவல் :
திரு.நே.பிருந்தாபன்
இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்
இந்துகலாசார நிலையம் நாவற்குடா
மட்டக்களப்பு
0772326183