இளம் ஆசிரியதம்பதிகள் விபத்தில்: கணவன் ஸ்தலத்தில் பலி: மனைவி படுகாயம்: சோகமயம்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 10 செப்டம்பர், 2018

இளம் ஆசிரியதம்பதிகள் விபத்தில்: கணவன் ஸ்தலத்தில் பலி: மனைவி படுகாயம்: சோகமயம்!

பாடசாலைக்குச்செல்கையில் இளம் ஆசிரியதம்பதிகள் விபத்தில்:
கணவன் ஸ்தலத்தில் பலி: மனைவி படுகாயம்: சோகமயம்!
 (காரைதீவு நிருபர் சகா)

பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில்  சென்றுகொண்டிருந்த இளம் ஆசிரிய
தம்பதிகள் பஸ் விபத்தில் சிக்கியதில் கணவன் ஸ்தலத்தில் பலியானார். மனைவி
படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் (10) திங்கட்கிழமை காலை 7.20மணியளவில்
கல்முனையையடுத்துள்ள சவளக்கடையில் இடம்பெற்றுள்ளது.

இருவரும் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரிய நீலாவணையைச் சேர்ந்தவர்கள்.
அண்மையிலேயே திருமணம் செய்தவர்கள். கணவர் ஞானமுத்து ஜயந்தசீலன்(வயது 41)
மண்டுர் மகாவித்தியாலயத்தில் தகவல்தொழினுட்ப பாட ஆசிரியர். மனைவி
கு.தாட்சாயினி(வயது 35) நாவிதன்வெளி 7ஆம் கிராமம் கணேசா வித்தியாயல
ஆசிரியை. இவர்களுக்கு முதலாம் வகுப்பில் பயிலும் ஒரு பிள்ளையுண்டு.

வழமையாக பெரியநீலாவணை வீட்டிலிருந்து புறப்பட்டு பிள்ளையைக்கொண்டு
பாடசாலைக்குவிட்டுவிட்டு பின்னர் கல்முனை கிட்டங்கியூடாக வந்து சவளக்கடை
ஏழாம் கிராமத்திலுள்ள கணேசா வித்தியாலயத்தில் மனைவியை இறக்கிவிட்டு கணவர்
நேராக மண்டுரை அடைந்து அவரது பாடசாலைக்குச் செல்வதும் பின்னர் பாடசாலை
முடிந்ததும் மண்டுரிலிருந்து நேராக வந்து மனைவியை ஏற்றிக்கொண்டு வீட்டை
அடைவதும் வழமையாகும்.


சம்பவம் பற்றி அறியவருவதாவது:

வழமைபோல காலை பாடசாலைக்குச் செல்வதற்காக இருவரும் மோட்டார்
சைக்கிளில் பயணித்துள்ளனர்.
கிட்டங்கியூடாக சவளக்கடையை அடைந்து நாவிதன்வெளி செல்லும் பாதையில்
சென்றுகொண்டிருக்கையில் வீட்டுத்திட்டமருகே பஸ்ஸொன்று
சென்றுகொண்டிருந்தது.
நேரத்திற்கு பாடசாலைக்கு சென்று பஞ்சரில் கையைப்பதிக்கவேண்டும் என்ற
அவசரத்தில் பஸ்ஸை முந்திச்செல்ல எத்தனித்துள்ளனர்.

முந்தும்போது கொங்கறீட்வீதியாதலால் சறுக்கவே கணவர் பஸ்முன்னால்விழ
மனைவியும் மோட்டார்சைக்கிளும் மறுபுறம் வீழ்ந்தனர்.
பஸ் முன்னால் வீழ்ந்த கணவர்மீது பஸ் ஏறியுள்ளது. இடுப்புப்பகுதியூடாகவே
பஸ் ஏறியதனால் அந்த இடத்திலேயே அவர் இரத்த வெள்ளத்தில்
மரணித்துக்கிடந்துள்ளார்.

மனைவி வேகமாகவீழ்ந்ததில் அவருக்கும் படுகாயம் . அவரை கல்முனை
ஆதாரவைத்தியசாலைக்குகொண்டு சென்றதும் அங்கு அவசரசிகிச்சைப்பிரிவில்
அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

கணவனின் சடலமும் அங்கு கொண்டசெல்லப்பட்டுள்ளது. மேலதிக பரிசோதனைக்காக
அம்பாறை பொது வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் நாவிதன்வெளிப்பிரதேச ஆசிரியர்கள் மண்டுர் ஆசிரியர்கள்
பெரியநீலாவணைப்பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளன.
காயப்பட்ட தாட்சாயினி ஆசிரியை கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.குபேரனின்
மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழாம்கிராமம் கணேசா வித்தியாலய அதிபர் பொன்.பாரதிதாசன் கூறுகையில்:
குறித்த ஆசிரியை தாட்சாயினி பாடசாலைக்கு நேரத்துக்குமுந்தி வந்து
கடமையைச்சரிவரசெய்துவிட்டு நேரம் பிந்திச்செல்கின்ற அர்ப்பணிப்பான
ஆசிரியை. அவருக்கு இவ்விதம் நேர்ந்ததையிட்டு மிகவும் ஆழ்ந்த
கவலையடைகின்றேன் என்றார்.
சவளக்கடைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages