எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் முன்னிட்டு தேற்றாத்தீவின் பாரம்பரிய விளையாட்டும் தமிழ் மக்களின் விளையாட்டுக்களில் முக்கியாமான விளையாட்டான கொம்பு முறி விளையாட்டு கடந்த மூன்று நாட்களாக தேற்றாத்தீவில் இடம் பெற்றது.
இவ் விளையாட்டின் ஆரம்ப நிகழ்வான போர் தேங்காய் உடைத்தல் வியாழக்கிழமை(06.09.2018) மாலை 4.30 மணியாளவில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
அன்றைய தினம் இரவு வடசேரி தென்சேரி கொம்புகளுக்கு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தில் உருகொடுக்கும் நிகழ்வு இடம் பெற்றது.வெள்ளிக்கிழமை(07.09. 2018) காலை உருகொடுக்கப்பட்ட கொம்புகள் தேற்றாத்தீவில் வீதிகள் தோறும் நகர்வலம் இடம் பெற்றது.
எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் கவுத்தியடிகள் அரங்கு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் பி.ப.4 மணிக்கு ஆரம்பமாகியது.
இவ் கவுத்தியடிகள் அரங்கிற்கு முதன்மை அதிதிகளாக கலாநிதி சி.அமலநாதன்( பணிப்பாளர் நாயகம்,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு,கொழும்பு),போராசிரியர். மா செல்வராஜா, சைப் புலவர் வி.றஞ்சிதமூர்த்தி(தலைவர்,மட் டக்களப்பு தமிழ்ச் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் கொம்புமுறி விளையாட்டுக்கான கொம்புகள் கட்டப்பட்டு வடசேரிதென்சேரி என இரு அணிகளாக பிரிந்து கொம்புகள் கொம்புடைக்கு விழா ஆரம்பமாகியது.இதன் கொம்புகள் இரண்டு வலுவான கொம்புளாக காணப்பட்டதால் கொம்புகள் சறுக்கி உடையமறுத்தது.
கொம்புகள் சறுக்கி உடையமறுத்த காரணத்தால் விளையாட்டு அடுத்த நாள் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. நேற்று சனிக்கிழை(08.09.2018) கொம்புகள் மீண்டும் கட்டப்பட்டு கொம்புடைக்கும் நிகழ்வாரம்பமாகியது அதன் விளைவாக தென்சேரி கொம்புடைந்து வெற்றி பெற்றது.
இன்று(09.09.2018) அதிகாலை தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனுக்கு விசேட பூஜையுடன் கொம்புமுறி விழா நிறைவடைந்தது. இவ் கொம்புமுறி விளையாட்டினை கண்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கவிடயம்.