இன்று மடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல்.
களஞ்சிய அறை கிணறு பாத்திரங்கள் சேதமென்கிறார் ஆலயதலைவர் கமல்!
(திரு.வி.ரி.சகாதேவராஜா)
நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி மீனாட்சி அம்மனாலயம்
யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இச்சம்பவம் அதிகாலையில் நடுநிசியில் இடம்பெற்றுள்ளது.
நடுநிசியில் ஆலயவளாகத்தினுள் புகுந்த யானை அங்கிருந்த களஞ்சியசாலையை
தும்பிக்கையால் உடைத்துள்ளது.
அங்கிருந்த கிடாரம் சட்டிபானை பீங்கான்கள் எல்லாம் சேதமடைந்துள்ளதுடன்
கட்டடம் பாவிக்கமுடியாதளவிற்கு வெடித்துள்ளது.
மேலும் அங்கிருந்த கிணற்றையும் உடைத்துச்சேதப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் ஆலய பரிபாலனசபைத்தலைவர் கோ.கமலநாதன் ஊடகங்களுக்கு கூறுகையில்:
நேற்று நடுநிசியில் யானைகள் புகுந்து இந்த அட்டுழியத்தைச் செய்துள்ளது.
அதிகாலையில் அருகிலுள்ள காலைச்சொந்தக்கரார் யூசுப் எனக்கு தொலைபேசியில்
இத்தகவலைச்சொன்னார்.
நான் அதிகாலையில் இங்கு வந்துபார்த்தேன். இவை சேதமடைந்துள்ளது.
பாரிபாலனசபையை அழைத்துள்ளேன் பொலிஸில் முறைப்பாடு செய்ய.
வயல்களுக்கு மத்தியில் இவ்வாலயம் இருப்பதால் ஆலயத்தைச் சுற்றி கம்பிவேலி
அமைத்து மின்விளக்குகள் பொருத்தப்படவேண்டும்.
தனவந்தர்கள் புத்திஜீவிகள் சேர்ந்துதான் இப்பாத்திரங்களெல்லாவற்றையும்
தந்தார்கள்.அனைத்தும் நாமாகியுள்ளன. வெள்ளிக்கிழமை மற்றும் பூரணை
தினங்களில் இங்கு நிறைய அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அவற்றை
பக்தர்களுக்காக சமைக்கவும் பகிரவும் இப்பாத்திரங்கள் பயன்பட்டன.
அரசாங்கம் பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன் நட்டஈட்டையும் தர
நடவடிக்கைஎடுக்கவேண்டும். என்றார்.
ஆலயபரிபாலனசபைச்செயலாளர் கே.சண்முகநாதனும் அங்கிருந்தார்.