நாவிதன் வெளி 15ம் கிராம விஞ்ஞான மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 10.9.2018 அன்று கமு/சது/விவேகானந்தா மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் அமைப்பின் கன்னி நிகழ்வாக கணித விஞ்ஞான வினாடிப் வினாப் போட்டியொன்று நாவிதன்வெளி 15ம் கிராம விஞ்ஞான மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் செல்வன் வ.யதுர்ஷன் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு ரங்கநாதன் ஐயா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் இப் போட்டியில் நாவிதன்வெளிக் கோட்டத்தைச் சேர்ந்த கமு/சது/ வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், கமு/சது/ விவேகானந்தா மகா வித்தியாலயம், கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலயம், கமு/சது/ விவேகானந்தா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 10 மற்றும் தரம் 11 ஐச் சேர்ந்த மாணவர் குழுக்கள் பங்கு பற்றியதுடன் குலுக்கல் முறையில் பாடசாலைகளிடையே நடைபெற்ற போட்டியில் தரம் 10 மற்றும் தரம் 11 ல் கமு/சது/ நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்கள் இறுதிப் போட்டியில் மோதியதுடன் கமு/சது/ நாவிதன்வெளி அன்னமலை வித்தியாலய மாணவர்கள் அணி தரம் 10 மற்றும் தரம் 11ல் 1ம் இடத்தைப் பெற்றதுடன் கமு/சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்கள் அணி 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். 1ம் மற்றும் 2ம் இடத்தினைப் பெற்ற அணிகளின் அனைத்து மாணவர்களும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 10 செப்டம்பர், 2018
நாவிதன்வெளி 15ம் கிராம விஞ்ஞான மாணவர்களால் கணித விஞ்ஞான வினாடி வினா போட்டி..
Tags
# Lanka
Share This
About karaitivu.org
Lanka
Labels:
Lanka
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*