காட்டுப்பாதையை முன்கூட்டியே பரீட்சித்த பதில் அரசாங்கஅதிபர் விமல்! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 4 ஜூலை, 2018

காட்டுப்பாதையை முன்கூட்டியே பரீட்சித்த பதில் அரசாங்கஅதிபர் விமல்!

கதிர்காம பாதயாத்திரிகர்கள் பயணிக்கின்ற காட்டுப்பாதையை இருநாட்கள்  முன்னதாகவே நேரடியாகச்சென்றுப்பரீட்சித்தார்அம்பாறை மாவட்ட பதில் அரசாங்கஅதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் அவர்கள். அவருடன் லாகுகலை பிரதேசசெயலாளர் சந்துரவ மற்றும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்புப்படையினரும் சென்றிருந்தனர்.
இவர்களது பயணம் இடம்பெற்றது.
உகந்தையிலிருந்து குமுக்கன்வரையிலான பகுதியை அவர் நேரடியாகச்சென்று பார்வையிட்டு யாத்திரீகர்கள் செல்வதற்கு பாதுக்காப்பானதாக உள்ளதா? என்பதை  ஆராய்ந்தார்.
 அம்பாறை மாவட்ட பதில் அரசாங்கஅதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன்  அங்கிருந்து தகவல் தருகையில்:
உகந்தையிலிருந்து பாதை சீராக உள்ளது. இடையிடையே வனவிலங்குகள் பறவைகள் உள்ளன. முதலாவது தங்குமிடமான வாகூரவட்டையிலுள்ள உப்புகலந்த ஓடையில் நீர்மட்டம்  சற்றுகூடுதலாக உள்ளது.
குமுக்கன் ஆலயப்பிரதேசம் துப்பரவாகஉள்ளது. எனினும் குமுக்கன் ஆற்றிற்கு நேராக மறுபக்கம் கடக்கமுடியாது. நீர்மட்டம் வழமைபோல அதிகமாகவுள்ளது.
எனவே சற்றுதூரம் நடந்து வழமையாக கடக்கும் பாதையால்தான் செல்லவேண்டும். அங்கு நீர்மட்டம் வெகுவாகக்குறைந்துள்ளது. கணைக்கால் வரை நீர்மட்டமுள்ளது. எனவே அடியார்கள் பயமின்றி குமுக்கனைக்கடக்கலாம்.
மற்றும் யாத்திரீகர்களுக்குத் தேவையான குடிநீர்வசதியை ஏற்படுத்தும்பொருட்டு நீர்த்தாங்கிவைக்கப்படும் இடங்களையும் பார்வையிட்டுஉரிய நடவடிக்கையை மேற்கொண்டேன் என்றார்.
காட்டுப்பாதை 4ஆம் திகதி காலை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages