யாழ் இந்து சாரணர்களினால் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடித்திருநாள் - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 18 ஜூலை, 2018

யாழ் இந்து சாரணர்களினால் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடித்திருநாள்


(Ingaran Sivashanthan)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர்களினால் ஆடிப்பிறப்பு தினம் இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் ஞான வைரவ பெருமான் ஆலய முன்றலில் ஆடிக் கூழ் காய்ச்சப்பட்டு சாரணர்களினால் கல்லூரி சமூகத்திற்கு ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டு இன்புற்றனர். 

இதேவேளை சிறந்த சாரணர் செயற்பாட்டாளரும் சர்வதேச சாதனையாளருமான செல்வன்.ந.சிவமைந்தன் குழுச்சாரண பொறுப்பாரிசியர் திரு.க.சுவாமிநாதன் அவர்களினால் இத்தினத்தில் கெளரவிக்கப்பட்டதும் மிக முக்கிய விடயமாகும். தொடர்ந்து குழு சாரண பொறுப்பாசிரியரினால் எமது வாழ்க்கை முறையும் பாரம்பரியமும் எனும் தொனிப்பொருளில் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட இந் நிகழ்வினை துருப்புத்தலைவன் செல்வன்.சி.பிரணவன் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு பாடசாலை சமுகத்தினர் அனைவரும் பரீட்சை காலத்திலும் கலந்து கொண்டது சிறப்பிற்குரிய விடயமாகும்.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages