திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியையின் யந்திர பூஜை நிகழ்வு
இலங்காபுரியின் கிழக்கு இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்கதும் பெருமை கொண்டதுமான திருத்தலங்களில் ஒன்றான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகக் கிரியைகளின் ஆரம்ப கிரியைகளுள் ஒன்றான 'யந்திர பூஜை' நிகழ்வானது கடந்த 06.05.2018 திகதி ஞாயிற்றுக்கிழமை சுவாமி சித்திரவேலாயுதரின் ஆசியுடனும் அனுக்கிரகத்துடனும் ஆலயத்தில் நடைபெற்றது.
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான இயந்திரபூஜை ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் வெகுவிமரிசையாக நேற்று நடைபெற்றது.
கிரியைகள் அனைத்தும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் தலைமையிலும் ஆலயகுரு சிவஸ்ரீ நீதிநாதக்குருக்கள் அங்குசநாதக்குருக்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
கடந்த இருவருடங்களாக ஆலயத்தில் பாலஸ்தாபனம் இடம்பெற்றிருந்தமையினால் ஆடிஅமாவாசைத் தீர்த்தமானது மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நடைபெற்றுவந்தது தெரிந்ததே.
எதிர்வரும் யூன் மாதம் 25ஆம் திகதி ஆலயத்தின் மகாகும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.
அதன்பின்பு இவ்வருட ஆடிஅமாவாசைத்திருவிழா நடைபெறவிருப்பதால் இம்முறை திருவிழா புதுப்பொலிவுடன் மிகவும் சிறப்பாக நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்கிரியை நிகழ்வு காலை 08.00மணி தொடக்கம் 10.00மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் அவர்களின் தலைமையிலான 5 குருமார்களின் பங்குபற்றுதலுடன் மூலத்தானாதிபதி மற்றும் ஏனைய பரிவார தெரிவங்களின் யந்திரங்களுக்கான அபிசேகம்இ ஜபம் ஆகியன இடம்பெற்று பூஜை ஆராதனை நடைபெற்றது. மேலும் அன்று முதல் தொடர்ந்து நாற்பத்து எட்டு(48) நாட்களுக்கு யந்திரங்களிற்கு பூஜை வழிபாடுகள் நடைபெறும் .
தொடர்ந்து எதிவரும் ஆனி மாதம் பதினெட்டாம் திகதி (2018.06.18) ஆம் திகதி கும்பாபிஷேகத்திற்கான சகல கரும கிரியைகளும் ஆரம்பமாகி ஆனி மாதம் இருபத்து மூன்று மற்றும் இருபத்து நான்காம் (2018.06.23 ரூ 24 ) திகதிகள் எண்ணைகாப்பு சாற்றும் நிகழ்வும் இடம்பெற்று ஆனி மாதம் இருபத்தைந்தாம் (25.06.2018) திகதி ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானிற்கு மஹா கும்பாபிஷேகம் மேற்கொள்வதற்கு திருவருரளும் குருவருளும் கைகூடியுள்ளது.
மேலும் இவ் யந்திர பூஜை நிகழ்வினை ஆலய வண்ணக்கர் திரு வ.ஜயந்தன் மற்றும் ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்இ செயலாளர் ஏ.செல்வராஜா மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்தினர். மேலும் இவ் யந்திர பூஜை நிகழ்வில் ஏராளமான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.