கதிர்காம பாதயாத்திரை ஆரம்ப நிகழ்வு !! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 12 மே, 2018

கதிர்காம பாதயாத்திரை ஆரம்ப நிகழ்வு !!

நேற்று காரைதீவில் வேல்சாமிகுழுவினருக்கு காப்புக்கட்டி திருவமுது கொடுத்து யாழ்ப்பாணத்திற்கு வழியனுப்பும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இவ்வருடத்திற்கான கதிர்காம பாதயாத்திரையை மேற்கொள்ளுமுகமாக நேற்று (10) வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயக தேவஸ்தானத்திலிருந்து வழியனுப்புவிழா பக்திபூர்வமாக நடைபெற்றது.

காரைதீவு நந்தவனப்பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரைக்குழு இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது. சந்தவன சித்திவிநாயக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கு.மகேஸ்வரக்குருக்கள் விசேட பூஜையினை நிகழ்த்தி வெள்ளி வேலை வேல்சாமியிடம் கையளித்தார்.
குறித்த வெள்ளிவேலை பக்தர்கள் வணங்கி வழிபட்டு அரோஹரா கோசம் முழங்க ஆலயத்தை சுற்றிவந்து வழியனுப்பினர்.

இந்துசமயவிருத்திச்சங்க தலைவர் எஸ்.மணிமாறன் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் பாதயாத்திரை தொடர்பாக உரையாற்றினர். மகேஸ்வரக்குருக்கள் ஆசியுரை நிகழ்த்தினார்.

பாரம்பரிய மரபுரீரியான முறைப்படி பாதயாத்திரீகர்களுக்கு காப்பு அணிவித்து திருவமுது வழங்கப்பட்டு சாஸ்ட்டாங்க நமஸ்காரம் செய்து தேங்காய் உடைத்து வழியனுப்பினர்.

உலக சைவத்திருச்சபையின் இலங்கைக்கான கிழக்குமாகாண இணைப்பாளரும் ஸ்ரீ நந்தவனப்பிள்ளையாhர் கதிர்காம பாதயாத்திரைக்குழுவின் தலைவருமான வேல்சாமி மகேஸ்வரன் குழுவினரை இன்று காரைதீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வழியனுப்பிய இந்நிகழ்வில் ஆலயதர்மகர்த்தாக்கள்  இந்துசமய பிரதிநிதிகள் இந்து ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இன்று காரைதீவிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணம் செல்லும் வேல்சாமி குழுவினர் ஒருவாரகாலம் யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்தில் தங்கியிருந்து சகல ஆயத்தங்களையும் மேற்கொள்வார்கள்.

காரைதீவிலிருந்து எச்டீஓ வான் மூலம் கல்முனைக்கு சுவாமிகள் ஏற்றப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் பேருந்தில் ஏற்றிஅனுப்பப்பட்டனர்.



பின்பு 17ஆம் வியாழக்கிழமை அதிகாலை சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கான 46வது பாதயாத்திரை பக்திபூர்வமாக ஆரம்பமாகின்றது என மன்றச்செயலாளர் கு.ஜெயராஜி  தெரிவித்தார்.










Post Bottom Ad

Responsive Ads Here

Pages