கடந்த காலங்களில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தொண்டராசிரியர்களாகக் கடமையாற்றியவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அண்மையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தகுதி பெற்ற 456 பேரினது பெயர்ப் பட்டியல் கிழக்கு மாகாண சபையின் www.ep.gov.lk இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பெயர்ப் பட்டியல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படப்படக்கூடியது எனவும், மேன்முறையீடு அல்லது முறைப்பாடுகள் இருப்பின் ஆளுனரின் செயலாளர், கிழக்கு மாகாணம், திருகோணமலை எனும் முகவரிக்கு 2018 மே 17ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.