இன்று திருக்கோவில் கும்பாபிசேகத்திற்கான யந்திரபூஜை!
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் மகாகும்பாபிசேகத்திற்கான யந்திரபூஜை இன்று(06) ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தலைவர் சு.சுரேஸ் தலைமையில் சமயசடங்குகளுடன் நடைபெறவுள்ளது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்களின் தலைமையில் 5குருமார்களின் பங்குபற்றுதலுடன் இன்று காலை சமயகிரியைகளுடன் யந்திரபூஜை ஆரம்பமாகவுள்ளது என ஆலயபரிபாலனசபைச் செயலாளர் ஏ.செல்வராஜா தெரிவித்தார்.
15ஆண்டுகளுக்குப்பிற்பாடு எதிர்வரும் ஜூன்மாதம் 25ஆம் திகதி புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் நடைபெறவிருக்கிறது.
அதனையொட்டி 26அடி உயரமுடைய 2அடி விட்டமுடைய நாகமரத்திலான கொடிமரம் கடந்தமாதம் ஆலயத்தலைவர் சு.சுரேஸ் தலைமையில் சாஸ்திரசம்பிரதாயங்களுடன் நடப்பட்டது தெரிந்ததே.
மகாகும்பாபிசேகத்தையொட்டி ஆலயம் புதுப்பொலிவுபெற்று வருகின்றது.