வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிசேகத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் சகல தமிழ்க்கிராமங்களிலிருந்தும் பிரதிநிதிதிகள் தெரிவுசெய்யும் மாவட்டபொதுக்கூட்டம் ஆலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் ஞாயிறன்று ஆலய பரிபாலனசபைத்தலைவர் கோ. கமலநாதன் தலைமையில் புதிய ஆலயமண்டபத்தில் நடைபெற்றது.
பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் ஈறாகவுள்ள தமிழ்க்கிராமங்கள் சார்பில் கலந்துகொண்ட பக்தர்கள் மத்தியிலிருந்து கும்பாபிசேகத்திற்கான பிரதிநிதிகள் தெரிவாகினர்.
ஆலய நிருவாகசபை உறுப்பினர்களோடு ஊர்ப்பிரதிநிதிகளையும் இணைத்து மகா கும்பாபிசேகக்குழு தோற்றுவிக்கப்பட்டது. அவர்களில் 5 உபகுழுக்களும் தெரிவாகவுள்ளது.
ஆலய ஆலோசகர்களான வைத்தியஅதிகாரி டாக்டர் சா.இராஜேந்திரன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலும் உரையாற்றினர்.
புதிய பிரதிநிதிகளின் கருத்துக்களும் பெறப்பட்டன.
ஆலயபரிபாலனசபைச்செயலாளர் கே.சண்முகநாதன் நன்றியுரையாற்றினார்.