நாட்டின் தென்னை உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக தென்னை பயிர்ச்சய்கை சபையினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகினறது.அந்தவகையில் கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலைய பயிலுனர்கள் , போதனாசிரியர்கள், ஊழியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று(14.05.2018) நடைபெற்றது. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் K.முருகானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்னை நடுதலுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் நடைமுறைகள் என்பன தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திருமதி P.ரவிராஜ் அவர்களினால் விரிவுரைக்கப்பட்டது.
தொடர்ந்து மாகாண சுகாதார பணிப்பாளரினால் நிலைய வளாகத்தினுள் உரிய முறைப்படி தென்னங்கன்று நடப்பட்டதுடன் பயிலுனர்களுக்கான தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.Post Top Ad
Responsive Ads Here
செவ்வாய், 15 மே, 2018

மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் தென்னை நடல் கருத்தரங்கு......
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*