கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 6 மே, 2018

கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா!

கிரான்குளத்தில் சுவாமி விவேகானந்தர் பூங்கா!

கல்முனை மட்டக்களப்பு பிரதானவீதியில் கிரான்குளத்தில் மூன்றரை ஏக்கர் காணியில் சுவாமி விவேகானந்தர் பூங்கா ஒன்று நிருமாணிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை புதுக்குடியிருப்பு சமுக நலன்புரி அமைப்பின் மாவட்டக்காரியாலயம் முன்னெடுத்துள்ளதாக அமைப்பின் ஸ்தாபகர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான உதவிகளை பொதுமக்களிமிருந்து எதிர்பார்க்கின்றார்கள் இவ் வமைப்பினர்.

குறித்த அமைப்பு கடந்த 20வருட காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் பல்வேறு சமுகப் பணிகளையும் ஆற்றிவருகின்றது.
இந்நிறுவனம் கிரான்குளத்தில் மூன்றரை ஏக்கர் காணியை அண்மையில் கொள்வனவு செய்துள்ளது.

இப்பூங்கா மூலம் பெறும் வருவாய்கள் அனைத்தும் இந்நிறுவனம் பழுகாமத்தில் நடாத்திவரும் திலகவதியார் மகளிர் இல்லத்திற்கும் புதுக்குடியிருப்பில் இயங்கிவரும் விவேகானந்த தொழினுட்பவியல் கல்லூரி மாணவர்க்கு இலவசமாக பயிற்சிகள் வழங்குவதற்கும் பயன்படப்போகிறது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

எனவே இப்பணிக்கு உதவக்கூடியவர்கள் முடிந்தவர்கள் தம்மாலான உதவிகளை வழங்கலாமென அவர் கேட்டுள்ளார். தொடர்புக்காக 065 22 50189.









Post Bottom Ad

Responsive Ads Here

Pages