வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு 06 துவிச்சக்கர வண்டிகள்!
வசிகரன் சமூக அறக்கட்டளை அமைப்பினால் மல்வத்தையில் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு 06 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் இரு ஆலயங்களுக்கும் நிதி உதவியும் வழங்கப்பட்டது.இதில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் வசிகரன் சமூக அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பிரபு பொருளாளர் காந்தன் மற்றும் ஆலயத்தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டதையும் காணலாம்.